< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி
|
25 Aug 2022 5:48 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கால்நடைகள் தொல்லை

ராமநாதபுரம் மாவட்ட நகர் சாலையில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன.. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.

மேசியா, ராமநாதபுரம்.

கண்மாய் தூர்வாரப்படுமா?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சுவாத்தான் கிராமத்தில் உள்ள கண்மாய் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் கருவேல மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த கண்மாயை பயன்படுத்தி வந்த பொதுமக்கள், விவசாயிகள் தண்ணீர் தட்டுப்பாட்டால் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாயை தூர்வார வேண்டும்.

ஜெயசந்திரன், முதுகுளத்தூர்.

மீனவர்கள் சிரமம்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் மீனவர்கள் மீன்களை பதப்படுத்தும் கிடங்கானது அரசு சார்பில் அமைக்கப்பட்டது. இந்த பதப்படுத்தும் அறையானது மூடப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மூடிய மீன் பதப்படுத்தும் கிடங்கை திறக்க வேண்டும்.

ஜெரால்டு, பாம்பன்,

புதிய ரேஷன்கடை கட்டிடம் வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா முகில்தகம் கிராமத்தில் ரேஷன் கடை இடிந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வுடன் வந்து செல்கின்றனர். எனவே இந்த பகுதியில் புதிய கட்டிடத்தில் ரேஷன் கடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

காந்தி, திருவாடானை.

குறைந்த அழுத்த மின்வினியோகம்

ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் மேற்கு தெருவில் சீரற்ற மின்சார வினியோகம் இருந்தது. இதனை சரிசெய்யும் வகையில் வடக்கு தெரு பள்ளிவாசல் சுற்றுச்சுவர் அருகே டிரான்ஸ்பார்மர் அமைக்க கம்பங்கள் நடப்பட்டன.. தற்போது இந்த பணியானது கிடப்பில் போடப்பட்டுள்ளது. குறைந்த அழுத்த மின்வினியோகத்தால் இப்பகுதி பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

முகமது சலீம், புதுமடம்.

Related Tags :
மேலும் செய்திகள்