ராமநாதபுரம்
'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குடிநீர் குழாய் வேண்டும்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள வண்ணாங்குன்டு ஊராட்சிக்கு உட்பட்ட நாகநாத சமுத்திரம் கிராமத்தில் குடிநீர் குழாய் இல்லை. எனவே அனைத்து வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
பொதுமக்கள், நாகநாதசமுத்திரம்.
அடிக்கடி மின்தடை
ராமநாதபுரம் மாவட்டம் நயினாமரைக்கான் ஊராட்சிக்கு உட்பட்ட அதன் சுற்றுவட்டார பகுதியில் சக்திபுரம் வரை ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்கள், நயினாமரைக்கான்.
அதிகாரிகள் கவனிப்பார்களா?
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் இருந்து சுற்றி உள்ள கிராமங்களை, ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலையை தரமான முறையில் அமைக்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கடலாடி.
சுகாதார சீர்கேடு
ராமநாதபுரம் நகரில் வசந்த நகர் பகுதியில் பல இடங்களில் பாதாள சாக்கடை நிறைந்து கழிவுநீர் வெளியே செல்கிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் வெளியே செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
கருவேலமரங்கள் ஆக்கிரமிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு உட்பட்ட கிராமப்புற பகுதியில் சில இடங்களில் சாலையை கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலையில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு கருவேலமரங்கள் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், சிறு, சிறு காயங்களையும் உண்டாக்கிறது. எனவே கருவேலமரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
செழியன், பரமக்குடி.