< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 July 2023 11:32 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பகலில் எரியும் மின் விளக்கு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் இரூர் கிராமத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சாலை ஓரத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் இரவு, பகல் பாராமல் எரிவதினால் மின்சாரம் விரயமாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

ம்பர் இல்லாத நம்பர் பிளேட்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஏராளமான வாகனங்கள் சாலைகளில் செல்கின்றன. இதில் பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் நம்பர்களை முறையாக எழுதாமல் அவற்றை மாடல் மாடலாக எழுதுவதினால் அந்த வண்டி நம்பரை எளிதில் கண்டு பிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் சிலர் தங்களின் வண்டி நம்பரை நம்பர் பிளேட்டில் எழுதாமல் தங்களின் பெயர்களை எழுதிக் கொண்டு சென்று வருகின்றனர். இதனால் இந்த வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி விட்டு செல்லும் போது அந்த வாகனங்களை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், பெரம்பலூர்.

சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் நகராட்சி 18-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய தெற்கு தெருவில் இருந்து வெள்ளந்தாங்கி அம்மன் கோவிலுக்கு செல்லும் சாலையில் கழிவறைக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் முறையாக அள்ளப்படுவதில்லை. இதனால் அந்தப்பகுதியில் தற்போது குப்பைகள் மலை போல் குவிந்து வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்தப்பகுதிக்கு அதிகாரிகள் வந்தால் தான் அந்த குப்பைகள் அகற்றப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே குப்பைகள் கொட்டுவதை தடுக்கவும், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டக்கூடாது என்று அறிவிப்பு பதாகையை வைக்கவும் நகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

கீழே விழும் நிலையில் உள்ள மின் கம்பம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி துணை மின் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாரணமங்கலம்-புதுக்குறிச்சி செல்லும் ஏறிப்பாதையில், விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த பாதை வழியாக தினமும் ஏராளமான மக்கள் நடந்து செல்கின்றனர். தற்போது மழைக்காலம் வர இருப்பதால் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராமராஜ், நாரணமங்கலம்.

மேலும் செய்திகள்