< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
22 May 2023 1:29 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மேற்கூரையுடன் கூடிய பஸ் நிறுத்தம் வேண்டும்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் நம்பர் 1 டோல்கேட் பகுதி வழியாக புத்தனாம்பட்டி, துறையூர், சேலம் செல்லும் பஸ்கள் தினசரி 500-க்கும் மேற்பட்டவை கடந்து செல்கின்றன. மழை, வெயில், விசேஷ காலங்களில் அவதியுறும் பயணிகள் நலன் கருதி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பஸ் நிறுத்தத்தில் உள்ளதுபோல் நம்பர் 1 டோல்கேட் பகுதியிலும் மேற்கூரையிட்ட பஸ் நிறுத்தம் அமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயணிகள், நம்பர் 1 டோல்கேட்.

வலுவிழந்த பாலம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், ஆலத்துடையான்பட்டி ஊராட்சி கல்லாங்குத்திலிருந்து மங்காயி அம்மன் கோவில் செல்லும் சாலையிலுள்ள பாலம் வலுவிழந்ததால் அவ்வழியே செல்லும் விவசாயிகள், பக்தர்கள் அச்சத்திலுள்ளனர். ஆலத்துடையான்பட்டி சின்ன ஏரியிலிருந்து வரும் நீர்வரத்து அதிகரித்தால் பாலம் உடையும் அபாயமுள்ளது. எனவே விபத்து நடக்கும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பக்தர்கள், ஆலத்துடையான்பட்டி.

குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாத குழாய்கள்

திருச்சி மாவட்டம், சிங்களாந்தபுரம் ஊராட்சி அம்மன் நகர், விஜய் நகர், செரீப் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புக்காக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் பதிக்கப்பட்டு சுமார் ஓராண்டு ஆகியும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தயாநக்கீரன், விஜய் நகர்.

மேலும் செய்திகள்