< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
17 May 2023 11:55 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள அம்மன் நகர் பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து சாலையில் விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அம்மன் நகர்.

நோய் பரவும் அபாயம்

திருச்சி மாவட்டம், நெம்பர் 1 டோல்கேட் சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் வாய்க்காலில் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொசுக்களின் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் இந்த குப்பைகளுக்கு அவ்வப்போது தீ வைக்கப்படுவதால் முதியவர்கள் மூச்சு விடுவதற்கு பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தனபால், நெ.1 டோல்கேட்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி கஞ்சநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் வழியாக அம்மாசத்திரம் வரை செல்லும் கிராம சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சாலை மேம்படுத்தப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மூர்த்தி, கஞ்சநாயக்கன்பட்டி.

போக்குவரத்து மாற்றப்படுமா?

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பஸ் நிலையத்திலிருந்து தினமும் இரவு சென்னைக்கு 5 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பஸ்கள் சென்னை சென்றவுடன் மீண்டும் அங்கிருந்து அதே வழித்தடத்தில் பெரம்பலூர் வரை வந்து அதன் பிறகு திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையம் வந்தடைந்து பிறகு தான் துறையூர் வருகிறது. இதனால் சென்னையில் இருந்து துறையூருக்கு பகல் நேரத்தில் பஸ் வசதி இல்லாமல் பயணிகள் தடுமாற வேண்டி உள்ளது. அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பஸ்கள் மீண்டும் அதே ஊர்களுக்கு திரும்பி வரும் நிலையில் துறையூருக்கு மட்டும் பஸ்கள் காலை நேரத்தில் சென்னையில் இருந்து நேரடியாக இல்லை. எனவே 5 பஸ்களில் துறையூர் டெப்போவை சேர்ந்த ஒரே ஒரு சூப்பர் டீலக்ஸ் பஸ்சை மட்டும் சென்னையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு பெருங்களத்தூர், மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, தொழுதூர், பெரம்பலூர் வழியாக துறையூருக்கு இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் பயணிகள், துறையூர்.

மேலும் செய்திகள்