< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
17 May 2023 6:19 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கால்நடை மருத்துவமனை வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே எம்.உசிலம்பட்டி உள்ளது. இதன் சுற்றுவட்டார கிராமங்களான சூரப்பட்டி, வடக்கிப்பட்டி, ஆவாம்பட்டி, வெள்ளையக்கவுண்டம்பட்டி, அம்மாபட்டி, பில்லனிவயல், முள்ளிப்பட்டி உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் அதிக அளவில் ஆடு, மாடு, கோழி, நாய்கள் என வளர்த்து வருகின்றனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட மாடு, ஆடுகளை சிகிச்சைக்காக காரையூர் அல்லது சடையம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து எம்.உசிலம்பட்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியம், காரையூர் அருகே உள்ள சூரப்பட்டியில் இருந்து அம்மாபட்டி வரை சாலை மண்சாலையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் இந்த சாலையை தார் சாலையாக தரம் உயர்த்தும் பணி தொடங்கப்பட்டது. தற்போது சாலையில் ஜல்லி கற்கள் பரப்பப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் தார் சாலை அமைக்கும் பணி முடிவடையவில்லை. இதனால் இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்த சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த பயணிகள் நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் போலீஸ் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளதால், இந்த பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தாமல் நிழற்குடைக்கு வெளியே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் இந்த பயணிகள் நிழற்குடை யாருக்கும் பயன்படாமல் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்