< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
17 May 2023 11:47 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள ஒதியம் கிராமத்தில் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள், தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை எடுத்துச் செல்வதுடன் இப்பகுதியில் உள்ள பழ வகை மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. மேலும் மின் வயர்களை பிடித்து தொங்குவதினால் அவை அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், குன்னம்.

பட்டுப்போன புளியமரம்

சிறுவாச்சூர் - இலுப்பைக்குடி சாலையில் நத்தக்காடு கிராமத்தின் உப்பேரி பகுதியில் உள்ள சாலையோர புளிய மரமானது பட்டுப்போய் உள்ளது. இந்த சாலை வழியாக பஸ்களில் மட்டுமல்லாது இருசக்கர வாகனங்களின் மூலமும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் விழும் என்ற நிலையில் உள்ள புளிய மரத்தை மக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், நத்தக்காடு.

பயனற்ற சுத்திகரிப்பு நிலையம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மேலமாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் இப்பகுதி மக்கள் வெயில் காலங்களில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஜெயப்பிரகாஷ், மேலமாத்தூர்.

மேலும் செய்திகள்