பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தொற்று நோயுடன் காணப்படும் தெருநாய்கள்
பெரம்பலூர் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவற்றில் ஒரு சில நாய்கள் நோய் தொற்று ஏற்பட்டு காணப்படுவதுடன், சில நாய்கள் வெறிபிடித்த நிலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். மேலும் தொற்றுநோயுடன் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பெரம்பலூர்.
சாலையில் நடக்க பெண்கள் அச்சம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகம்பூர் பகுதியில் சாலை ஓரம் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் குறைந்த வெளிச்சத்துடன் எரிவதாலும், போதிய மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதாலும் சில இடங்களில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக பெண்கள் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சிறுகம்பூர்.
விளம்பர பதாகைகளால் இடையூறு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் அரசியல் கட்சியினர்களும், கல்வி நிறுவனத்தினர்களும் விளம்பர பதாகைகளை கடைகளை மறைத்து வைத்துள்ளனர். இது கடைகாரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் கல்வி நிறுவனத்தினர் விளம்பர பதாகைகளை கடைகளுக்கு தொந்தரவு இல்லாத வகையில் வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வியாபாரிகள், வேப்பந்தட்டை.