< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
14 May 2023 7:03 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள மேலத்தானியத்தில் இருந்து அம்மாபட்டி வரை தார்சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சாலையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண் சாலை போல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக ஏராளமான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகின்றனர். இவர்கள் குண்டும், குழியுமான சாலையில் அவ்வப்போது கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சமூக ஆர்வலர்கள், காரையூர்.

எரியாத தெரு விளக்குகள்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜகிரி ஊராட்சி, காரைமேட்டுப்பட்டி பகுதியில் கடந்த 2 மாதங்களாக தெரு விளக்குகள் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் இரவு நேரத்தில் பெண்கள், குழந்தைகள் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வெங்கடேஷ், காரைமேட்டுப்பட்டி.

தலைகீழாக கிடக்கும் குப்பை தொட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா கொத்தமங்கலம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான குப்பை தொட்டிகள் தலைகீழாக கிடந்து வருகின்றன. தூய்மை இந்தியா திட்டத்தில் பெரும் பொருட்செலவில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் முறையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வைத்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சீனி, கொத்தமங்கலம்.

சாலை சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜகிரி ஊராட்சி, பொதியக்கோண்பட்டி பகுதியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை மேடும் பள்ளமுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த சாலையில் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வெங்கடேஷ் பிரசன்னா, பொதியக்கோண்பட்டி.

மேலும் செய்திகள்