< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 April 2023 11:29 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

துறையூர்- பெரம்பலூர் சாலையில் லாடபுரம் பிரிவுச்சாலையில் நிழற்குடைகள் அருகருகே 5 சூரிய ஒளி மின்விளக்குகள் அமைக்கப்பட்டு நன்கு எரிந்தது. சாலை திறக்கப்பட்டு சில மாதங்களில் 5 மின் விளக்குகளும் பழுதடைந்ததால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் விளக்குகளை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

ராமசந்திரன், லாடபுரம்.

மது பாட்டில்கள் விற்பனை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடைகளில் திறக்க அனுமதி கொடுத்த நேரத்திற்கு முன்பாகவும், பின்பாகவும் கடைகளில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்கப்படுகிறது. அருகில் உள்ள பார்களில் மது அருந்துவதற்கும் அனுமதிக்கிறார்கள். காலை நேரத்திலேயே மது பிரியர்கள் கடையை நோக்கி செல்வதால் அந்த நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சத்யா, பெரம்பலூர்.

கொட்டகை அமைக்கப்படுமா?

பெரம்பலூர் ஒன்றியம், செங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட செங்குணம் மற்றும் அருமடல் கிராமத்தில் தலா ஒரு ரேஷன் கடை உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் மழை மற்றும் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களில் ரேஷன் கடை முன்பு நீண்ட நேரம் வரிசையில் நின்று பொருட்கள் வாங்கி செல்கின்றனர். குடும்ப அட்டைதாரர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு நலன்கள் கருதி ரேஷன் கடை முன்பு பாதுகாப்பு கொட்டகை அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குமார் அய்யாவு, செங்குணம்.

அடிக்கடி மின்தடை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம் பழைய விராலிப்பட்டி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் மின்மாற்றி புதிதாக வைக்கப்பட்டுள்ள நிலையில் இணைப்பு கொடுக்காததால் மின் பற்றாக்குறையும் நிகழ்கிறது. எனவே மின்விசிறி, கிரைண்டர் போன்ற மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதாகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாலகுரு, பழைய விராலிப்பட்டி.

மேலும் செய்திகள்