< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
17 April 2023 12:52 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சீரமைக்கப்படாத பயணிகள் நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் போலீஸ் நிலையம் அருகே ஒரு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் பயணிகள் நிழற்குடை கட்டிடத்தின் பல்வேறு பகுதிகள் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மேற்கூரையில் உள்ள சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழந்து கான்கிரீட் கம்பிகள் வெளி தெரிகிறது. எப்போதும் வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த பஸ் நிறுத்ததிற்கு வரும் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்தாமல் நிழற்குடைக்கு வெளியே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். இதனால் இந்த பயணிகள் நிழற்குடை யாருக்கும் பயன்படாமல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைத்து மீண்டும் பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காரையூர்.

ஆபத்தான குடியிருப்புகள்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் கடை வீதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்பு வீடுகள் மிகவும் ஆபத்தான நிலையில் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். எனவே விபத்து நடக்கும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், திருவரங்குளம்.

தீயணைப்பு நிலையம் வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் சுற்றுவட்டார பகுதியான ஒலியமங்களம், எம் உசிலம்பட்டி, மேலத்தானியம், கீழத்தானியம், முள்ளிப்பட்டி, இடையாத்தூர், கொன்னையம்பட்டி, ஆலம்பட்டி, நல்லூர், கூடலூர், அரசமலை, மறவாமதுரை, சேரனூர், நெருஞ்சிகுடி, காரையூர் உள்பட 15-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்துள்ளன. எனவே இப்பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளுக்கு பொன்னமராவதி மற்றும் இலுப்பூர் பகுதிகளிலிருந்து தீயணைப்பு வீரர்கள் வரவேண்டி உள்ளது. எனவே இக்கிராமங்களில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் ஏற்படும் தீ விபத்து, பாம்புகளின் தொல்லை, கிணற்றில் ஆடு, மாடுகள் விழுதல் மற்றும் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படும்போது விரைந்து செயல்படுவதற்கு ஏதுவாக காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், காரையூர்.


மேலும் செய்திகள்