< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
16 April 2023 7:17 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அச்சத்்தில் பள்ளி மாணவர்கள்

அரியலூர் மாவட்டத்தில் லாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் நிகழ்ந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு கடந்த 2016-ல் அரியலூர் மாவட்ட நிர்வாகம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 5.30 மணி வரையிலும் கனரக வாகனங்கள் மற்றும் இதர கனரக வாகனங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வி.கைகாட்டியில் முத்துவாஞ்சேரி சாலையில் இருபுறமும் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்கள் மற்றும் ரெட்டிபாளையம் ஊராட்சியில் மு.புத்தூர் கிராமத்தில் செல்லும் டிப்பர் லாரிகள் நாகமங்கலம் மற்றும் முனியன்குறிச்சி சாலைகளில் அதிகளவில் வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு இடையூறாகவும், விபத்துகள் ஏற்படுத்தும் விதமாகவும் செல்கிறது. இதனால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் ஒரு வித பயத்தில் உள்ளனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

தூர்வாரப்படாத பாதாள சாக்கடை

அரியலூர் மாவட்டம், செந்துறை போலிஸ்நிலையம் முதல் உடையார்பாளையம் சாலை வளைவில் இருந்து இறுதி வரை அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கருப்பன், செந்துறை.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

அரியலூர் மாவட்டம், செந்துறை அரசு மருத்துவமனை சாலையில் இருந்து போலீஸ் நிலையம் வரை சாலையோர ஆக்கிரமிப்புகளால் வாகனங்கள் செல்ல பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கார்த்திக், செந்துறை.

ஆபத்தான அங்கன்வாடி கட்டிடம்

அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது மு. புத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கடந்த 2010 -2012-ம் ஆண்டில் அங்கன்வாடி பள்ளி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த கட்டிடம் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் இப்பள்ளியில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மின் இணைப்பு பழுதடைந்து உள்ளது. இதனால் குழந்தைகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மு.புத்தூர்.

மேலும் செய்திகள்