< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
12 April 2023 11:23 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நோய் பரவும் அபாயம்

திருச்சி ெநம்பர்.1 டோல்கேட், சமயபுரம் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தனபால், ெநம்பர்.1 டோல்கேட்.

சேதமடைந்த சிமெண்டு சாலை

மணிகண்டம் ஒன்றியம், கள்ளிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டப்பாறைப்பட்டி தெற்கு தெருவில் ஒன்றிய பொது நிதியில் இருந்து சுமார் 100 மீட்டர் அளவிற்கு புதிதாக சிமெண்டு சாலை போடப்பட்டுள்ளது. அந்த சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு தற்போது 6 மாதங்கள் ஆகிறது. அதற்குள் சிமெண்டு சாலையில் ஆங்காங்கே உடைந்து பெயர்ந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இதுகுறித்து மணிகண்டம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய பொறியாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் அவர்கள் அதுபற்றி ஏதும் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டப்பாறைப்பட்டி தெற்கு தெருவில் புதிதாக அமைக்கப்பட்டு சேதம் அடைந்த சிமெண்டு சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்து அதை சீரமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், மட்டப்பாறைப்பட்டி.

விவசாய பயிர்களை சேதப்படுத்தும் மான்கள்

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, சிட்டிலரை ஊராட்சி மேலமேடு காட்டுப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மான்கள் சுற்றி வருகின்றன. இந்த மான்கள் மாலை நேரங்களில் இப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்குள் திடீரென புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் எந்த விவசாயமும் நிம்மதியாக செய்ய முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விவசாயிகள், மேலமேடு.

வீணாகும் குடிநீர்

திருச்சி மாவட்டம், அந்தநல்லூர் ஒன்றியம், பெரிய கருப்பூர் கிராமத்தில் சாலையின் அடிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரிய கருப்பூர்.

மேலும் செய்திகள்