< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
12 April 2023 5:50 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலை, சாக்கடை வசதி வேண்டும்

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை நிலா நகர் கிழக்குப்பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான சாலை, சாக்கடை வசதிகள் இல்லாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தாந்தோன்றிமலை.

தாழ்வாக செல்லும் மின்கம்பிகள்

கரூர் மாவட்டம், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் தார்சாலை நெடுகிலும், கிராம சாலைகள் வழியாகவும், விவசாய தோட்டங்கள் வழியாகவும் மின்கம்பி மூலம் மின்சாரம் செல்கிறது. மின் கம்பிகள் பொருத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக குறுக்கு, நெடுக்காக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. சில நேரங்களில் கம்பிகள் அறுந்து விவசாய தோட்டங்களிலும், தார் சாலைகளிலும் விழுந்து விடுகிறது. இவ்வாறு விழுந்து கிடப்பதால் அந்த வழியாக செல்லுவர்களுக்கு தெரியாததால் மின்சாரம் பயந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. அதேபோல் விவசாய தோட்டங்களில் மின் கம்பிகள் அறுந்து கிடப்பதால் விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கால்நடைகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளில் மின் கம்பிகளுக்கு பதிலாக மின் கேபிள்கள் அமைத்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பெரிய விபத்துக்கள் நடக்காமல் தவிர்க்கப்படுகிறது. மின்சாரமும் பாதுகாப்பாக செல்கிறது. அதேபோல் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின்சார கம்பிகளை அகற்றிவிட்டு மின்சார கேபிள் ஒயர்களை பொருத்தி விபத்துக்கள் ஏற்படாதவாறு உயர் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாலதி, நொய்யல்.

வாய்க்காலில் வீசப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக புகழூர் வாய்க்கால் செல்கிறது. இந்த நிலையில் இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாய்க்கால் தண்ணீரில் சிலர் வீசுகின்றனர். இதனால் வாய்க்கால் தண்ணீரில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்து வந்து பாலத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் செல்ல பெரிதும் தடையாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சமூக ஆர்வலர்கள், நொய்யல்.

வீணாகும் தண்ணீர்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி பகுதியில் தார் சாலை அருகில் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆழ்துளை கிணறு அமைத்து அதில் மின் மோட்டார் பொருத்தி மின் இணைப்பு தரப்பட்டது. அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி வைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் வீடுகளில் உள்ள அழுக்கு துணிகளை இங்கு கொண்டு வந்து நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் பிடித்து துணிகளை துவைத்து செல்கின்றனர். சிலர் தண்ணீரை திறந்து விட்டு கை, கால்களையும், முகங்களையும் கழுவுவதும், குளிப்பதுமாக உள்ளனர். சில நேரங்களில் தண்ணீரை திறந்து விட்டுவிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக நீர்த்தேக்க தொட்டி இருக்கும் பகுதி நெடுகிலும் குடிநீர் வீணாகி குழம்போல் தேங்கி நிற்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தமிழ்செல்வன், சேமங்கி.

மேலும் செய்திகள்