< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 April 2023 7:12 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கால்வாய் இன்றி அமைக்கப்படும் சாலை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சிறுவயலூர் ஊராட்சியில் உள்ள தேவேந்திர குல தெருவில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு புறம் மட்டும் கால்வாய் ஏற்படுத்தப்பட்டு மறுபுறம் சீரமைக்காமல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மழைபெய்யும்போது இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரண்டுபுறமும் கால்வாய் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ராஜசேகர், சிறுவயலூர்.

குண்டும், குழியுமான சாலை

பெரம்பலூர் நகரின் பழைய பஸ் நிலையத்திலிருந்து காமராஜர் வளைவு வரை உள்ள முக்கிய சாலை என்.எஸ்.பி. சாலை. இந்த சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தீரன் மேகநாதன், பெரம்பலூர்.

சாலையோரத்தில் பள்ளம்

பெரம்பலூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தம் அருகே தனியார் திருமண மண்டபம் எதிரே தார் சாலையை ஓட்டியுள்ள பகுதிகளில் ஒரு அடி பள்ளம் உள்ளது. அதாவது சாலையில் வரக்கூடிய வாகனங்கள் தார் சாலையை விட்டு பக்கவாட்டில் இறங்கினால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. குறிப்பாக சாலையில் கனரக வாகனங்கள் வரும்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் சாலையை விட்டு கீழே ஒரு அடி பள்ளத்தில் திடீரென இறங்கும் சூழ்நிலை உள்ளது. அப்போது பலர் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள பள்ளங்களை மண் கொட்டி சரி செய்து விபத்து ஏற்படுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வேப்பந்தட்டை.

மேலும் செய்திகள்