< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
9 April 2023 7:10 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மின்னல் வேகத்தில் செல்லும் வாகனங்கள்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி- விளாங்குடி அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கயர்லாபாத் (தேளூர்) போலீஸ் நிலையம். இந்த போலீஸ் நிலையத்திற்கு தினமும் தேளூர், கைகாட்டி, அஸ்தினாபுரம், குடிசல், கயர்லாபாத், கல்லங்குறிச்சி, மணலேரி என பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் புகார் கொடுக்க வருகின்றனர். இந்நிலையில் போலீஸ் நிலையம் முன்பாக செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் 24 மணி நேரமும் மின்னல் வேகத்தில் செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. குறிப்பாக சாலையைக் கடந்து போலீஸ் நிலையத்திற்கு உள்ளே வருவதற்கும், போலீஸ் நிலையம் வந்த பிறகு வெளியே செல்ல சாலையை கடப்பதற்கும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கயர்லாபாத் போலீஸ் நிலையம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், தேளூர்.

வேகத்தடை அமைக்கப்படுமா ?

அரியலூர் பஸ் நிலையத்திலிருந்து மேற்கு பகுதியில் அமைந்துள்ளது மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களும் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு பகுதி, கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகியோர்கள் குடியிருக்கும் பகுதி உள்ளது. நீதிமன்றத்தின் நுழைவாயில் பகுதியில் மிகுந்த வாகன விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. அதாவது அரியலூர் பஸ் நிலையமான கிழக்கு பகுதியிலிருந்து மேற்கு புறம் நோக்கி செல்லும் கனரக வாகனங்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும் மின்னல் வேகத்தில் செல்வதால் தென்புறப்பகுதியில் உள்ள நீதிமன்றத்திற்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் என அனைவரும் சாலையை கடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தொடர் விபத்துகள் நிகழும் சூழல் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நீதி மன்ற நுழைவாயில் பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துகளை தவிர்க்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அரியலூர்.

கீழே விழும் வாகன ஓட்டிகள்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள கழுமங்கலம்- நன்கு வழி செல்லும் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் இந்த சாலையில் தெருவிளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே இந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி சாலையில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலை மற்றும் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், கழுமங்கலம்.

மேலும் செய்திகள்