திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலையில் படுக்கும் கால்நடைகள்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் கூத்தப்பர் சாலையில் ஏராளமான கால்நடைகள் சாலையில் நடுமாடுவதும், படுத்துக்கொள்வதுமாக உள்ளன. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் கால்நடைகள் படுத்திருப்பது தெரியாமல் நிலைத்தடுமாறி அதன் மீது வாகனத்தை விட்டு கீழே விழுந்து வருகின்றனர். மேலும் பெரும் அளவில் விபத்துகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
திலகவதி, திருவெறும்பூர்.
குடிநீர் இன்றி மக்கள் அவதி
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், மேய்க்கல் நாயக்கன்பட்டி கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்து நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வினியோகிக்கப்பட்டு வரும் குடிநீர் கலங்கலாக வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களுக்கு உடல் உபாதை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வேணுகோபால், மேய்க்கல் நாயக்கன்பட்டி.