அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
எரியாத மின் விளக்குகள்
அரியலூர் வண்ணாங்குட்டை கரையோரத்தில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் இரவு நேரத்தில் எரிவது இல்லை. இதனால் இந்த நடைபாதை பகுதி மது பிரியர்களின் பாராக செயல்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குணா, அரியலூர்.
பஸ் இயக்கப்படுமா?
அரியலூர் மாவட்டம் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கீழப்பழுவூர் முதல் விளாங்குடி, கைக்காட்டி வரையிலும் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு நகர பஸ்கள் எவையும் இதுவரை இயக்கப் படவில்லை. இதனால் இம்மார்க்கத்தில் செல்லும் நீண்டதூர விரைவுப் பஸ்களையே பயணிகள் தம் பயணத்துக்கு சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இதனால் தஞ்சை, அரியலூர், ஜெயங்கொண்டம் போன்ற ஊர்களுக்கு தம் பணிகளுக்காக குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே கீழப்பழுவூர்-விளாங்குடி கைக்காட்டி வரை நகர பஸ்கள் இயக்கினால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து போக்குவரத்துத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பஞ்சநாதன், கீழப்பழுவூர்.