பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
ஆபத்தான மின்கம்பம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றியம், வி.களத்தூர் பிரிவிலிருந்து எலந்தலைப்பட்டி செல்லும் சாலையில் உள்ள மயானம் அருகே ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பாலகுரு, வி.களத்தூர்.
பயன்பாட்டிற்கு வராத சுகாதார வளாகம்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், சிறுவயலூர் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுகாதார வளாகத்தின் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து 2 மாதங்களை கடந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ராஜசேகர், சிறுவயலூர்.