பெரம்பலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
அடிப்படை வசதிகள் வேண்டும்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சி ஈச்சம்பட்டி 8-வது வார்டு அம்பேத்கர் காலனியில் சுமார் 70 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் உடைந்து தண்ணீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் சரியாக எரிவது இல்லை. குடிப்பதற்கு போதிய தண்ணீரும் இப்பகுதி மக்களுக்கு கிடைப்பது இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பொதுமக்கள், ஈச்சம்பட்டி.
குடிநீர் தட்டுப்பாடு
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், காடூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
நல்லதம்பி, காடூர் ஆதிதிராவிடர் காலனி.