< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
19 Feb 2023 11:09 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், நெ.1 டோல்கேட் முதல் லால்குடி வரை சாலைகள் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சௌகத், லால்குடி.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் புளியஞ்சோலை சுற்றுலா மையத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கும், அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் வாசிகளின் குடிநீர் தேவைக்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றும் மின்மோட்டார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுதடைந்தது. இதையடுத்து இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், புளியஞ்சோலை.

மேலும் செய்திகள்