< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
19 Feb 2023 5:34 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக மனு அளிக்கும் வகையில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளதால், அவர்கள் குடிக்கும் நீரை அருகில் உள்ள கடைகளில் காசு கொடுத்து வாங்கிய அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ரம்யா, பெரம்பலூர்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

பெரம்பலூர் நகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட புதிய மதனகோபாலபுரம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சாலை ஓரத்தில் கொட்டப்பட்டு வருவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நடராஜன், பெரம்பலூர்.

மேலும் செய்திகள்