< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
15 Feb 2023 6:17 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குரங்குகள் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், ஆவூர் ஊராட்சிக்குட்பட்ட ஆம்பூர்பட்டி, நால்ரோடு ஆகிய பகுதிகளில் குரங்குகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. அப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகள் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் விளைவிக்கும் தக்காளி, கொய்யா, இளநீர், மா உள்ளிட்ட காய்களை பறித்து கீழே எறிந்து சேதப்படுத்தவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டம் ஏற்படுகிறது. அதேபோல அப்பகுதியில் உள்ள வீடுகளிலும், கடைகளிலும் புகுந்து உள்ளே உள்ள பொருட்களை அள்ளி சேதப்படுத்தி விடுகிறது. மேலும் சிறு குழந்தைகளை கடிக்க வருவது போல அச்சுறுத்தி வருகிறது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதிகளில் கொண்டு விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலை வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியை அடுத்த கிருஷ்ணாஜி பட்டினம் ஊராட்சி திருமங்கலபட்டினம் கடற்கரை செல்லும் சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதால் தற்போது சிதிலமடைந்து குண்டும், குழியுமான காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக தினசரி காலையில் செல்லக்கூடிய பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் நிலை தடுமாறி நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மழை காலங்களில் சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக திருமங்கல பட்டினம் கிராம பொதுமக்கள் சாலை வசதி வேண்டி பல்வேறு மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்