< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
15 Feb 2023 11:45 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சட்டவிரோத செயல்கள் நடக்க வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் உயர் கோபுர மின்விளக்கு உள்ளது. இந்த விளக்கு மாலையில் எரியத் தொடங்கினால் மறுநாள் காலை வரை எரியும். இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பயனடைந்து வந்தனர். கடந்த சில நாட்களாக இரவு 9 மணி அளவில் நின்று விடுகிறது. இதனால் அந்த பகுதி இரவு முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உயர் கோபுர மின் விளக்கை இரவு முழுவதும் எரிய செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், துங்கபுரம் ஊராட்சி, அண்ணாநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக பஸ் நிறுத்தம் அருகே ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் குழாயில் இருந்து வெளியேறும் நீர் அருகே குளம்போல் தேங்கி கழிவுநீராக மாறி வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுபோல் காட்சி அளிக்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்