< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
15 Feb 2023 6:05 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையோரம் நிறுத்தப்படும் லாரிகள்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் முத்துவாஞ்சேரி சாலையில் தனியார் சிமெண்டு தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்டு ஆலைக்கு தினமும் ஏராளமான சுண்ணாம்புகள் ஏற்றி வரும் லாரிகள், பல்கர் லாரிகள் மற்றும் நெய்வேலியிலிருந்து நிலக்கரி ஏற்றி வரும் லாரிகள் இதோடு அல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து குப்பைகளை ஏற்றி வரும் லாரிகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இந்த லாரிகள் எப்போதும் போக்குவரத்திற்கு இடையூராக முதன்மை சாலையில் இருபுறமும் நிறுத்தி விடுகிறார்கள். இதனால் வி.கைகாட்டி புறக்காவல் நிலையம் முதல் தனியார் சிமெண்டு ஆலை வரை தற்சமயம் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாற்றம் அடைந்து வயல் வெளியாக உள்ளது. இதனால் இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் கனரக வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும்போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனால் இவ்வழியே செல்லும் பொது மக்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. சில இடங்களில் சாலையின் வெள்ளை நிற பட்டைகளை மறைத்து சுண்ணாம்புக்கல் மண்கள் மேடாக உள்ளது. இந்த சாலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒருபோதும் சுத்தம் செய்வது கிடையாது. வெயில் காலங்களில் இரவு நேரங்களில் இப்பகுதியில் வாகனங்களை ஓட்ட முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்த சாலை எப்போதுமே புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கீழேவிழும் வாகன ஓட்டிகள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் -சிதம்பரம் சாலையில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள குழந்தைகளை தெரு நாய்கள் அச்சுறுத்துவதால் அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்