திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை வணிகங்கள் கவனிக்கப்படுமா?
சாலை வணிகங்களில் விற்கப்படும் காய்கறிகள், பழங்கள் எடை போடும் கருவிகள் முறையாக புதுப்பிக்கப்படாமல், எடைகளில் குளறுபடி ஏற்படுகிறது. தொழிலாளர் நலன் மற்றும் எடை அலுவலர்கள் கடைகளில் ஆய்வு செய்வதுடன், இது போல சாலைகளில் வாகனங்களில் நடமாடும் விற்பனைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். மேலும் வணிகத்துக்கு உபயோகப்படுத்தும், வாகனங்கள், ஒலிபெருக்கிகள் தணிக்கை படுத்தப்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
ஜல்லிக்கற்கள் பெயர்ந்த சாலை
திருச்சி மாநகராட்சி மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகிலுள்ள மேட்டுத்தெரு மெயின் ரோட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது இந்த தார் சாலையின் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் இந்த சாலையில் நிலைதடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.