< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
12 Feb 2023 7:15 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

கழிப்பிடமாக மாறும் பஸ் நிலையம்

பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கிருந்து மாவட்டத்தின் பல்வேறு ஊர்களுக்கும் பஸ் ஏறிச்செல்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த பஸ் நிலையம் தற்போது வரை எந்த ஒரு புதுபித்தலும் இல்லாத பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. போதுமான இருக்கை வசதி இல்லை. மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதுடன் துர்நாற்றமும் வீசுகின்றது. இலவசக் கழிப்பிட வசதி இல்லை. ஆகையால் பொதுமக்களில் சிலர் பஸ் நிலையத்தின் உட்புறத்தினையே சிறுநீர் கழிப்பிடமாக மாற்றிவிட்டனர். இதனால் நோய்வாய்ப்படும் அபாயம் நிலவுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்மாற்றி

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமத்தில் உள்ள ஒதியம் செல்லும் சாலையில் வயலுக்கு செல்லும் மின்பாதையில் அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி சாய்ந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் மின்கம்பங்கள் சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்