அரியலூர்
தினத்தந்தி புகார் பெட்டி
|தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தெருநாய்கள் தொல்லை
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், பள்ளி மாணவ-மாணவிகளையும் கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
குழாயில் உடைப்பு
அரியலூர் மாவட்டம், கோடாலி கருப்பூர் கிராமத்தில் இருந்து உடையார்பாளையம் மற்றும் ஜெயங்கொண்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் ஆற்று தண்ணீர் குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு செல்லும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தொடர்புடைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அதுபோல் கோடாலி கருப்பூர் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து அணைக்குடம் கிராமம் வழியாக செல்லும் குழாயில் சோழமாதேவி பிரிவு சாலை அருகில் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 8 நாட்களாக தண்ணீர் அதிக அளவில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதனை சரி செய்ய வலியுறுத்தி அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை அந்த குடிநீர் குழாய் உடைப்பு சரி செய்யப்படவில்லை. இதனால் குழாய் உடைக்கும் மூலம் வெளியேறும் தண்ணீர் மீண்டும் குழாயில் தண்ணீர் வரத்து நின்றவுடன் உள்புறமாக இழுத்துக் கொள்கிறது. எனவே இந்த கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பயன்படுத்துபவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தொடர்புடைய அதிகாரிகள் இது
ஆபத்தான மின்மாற்றி
அரியலூர் தேரடி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சீரான மின்சார வினியோகம் செய்யும் வகையில் இப்பகுதியில் மின் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் மாற்றி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் மின் கம்பங்கள் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின் போது இந்த மின் கம்பங்கள் உடைந்து விழுந்தால் மின்மாற்றி கீழே விழுந்து உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் வீட்டு உபயோக மின்சாதன பொருட்களும் சேதம் அடைய வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பகலில் எரியும் தெருவிளக்குகள்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம்-சிதம்பரம் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்காக சாலையோரம் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தெரு விளக்குகள் பகல் 12 மணி வரை அணைக்கப்படாமல் எரிகிறது. இதனால் தேவையின்றி மின்சாரம் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
வீணாகும் குடிநீர்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தா.பழூர் பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தத்தில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 8 மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் இந்த குடிநீரானது தற்போது வரை வீணாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் தண்ணீர் வரும் நேரத்தில் தண்ணீர் வெளியாகும். தண்ணீர் நிறுத்தியவுடன் அங்கு தேங்கி நிற்கும் தண்ணீர் மீண்டும் குழாய் வழியாக சென்று விடுகிறது. இதனால் இந்த தண்ணீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதேபோல் அரசு மருத்துவமனை திருப்பத்தில் உள்ள காளியம்மன் கோவில் எதிரே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.