< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
29 Jan 2023 7:13 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம், முக்கண்ணாமலைப்பட்டி தெற்கு தெருவில் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுப்பாதையை தனி நபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் இப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலை, தெருவிளக்கு வசதி வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் அமைந்துள்ள அரையப்பட்டி தெற்கு வழி செல்லும் சாலை 3 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைப்பு இல்லாத நிலையில் உள்ளது. இந்த சாலையானது அரையப்பட்டி , வெள்ளக்கொல்லை மற்றும் புதுக்காடு ஊர் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3 ஊர்களுக்கு இச்சாலை முக்கிய வழித்தடமாக உள்ள நிலையில் இச்சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் மக்களின் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் இச்சாலையில் தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தினால் கல்லூரி மற்றும் அன்றாடம் வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்பும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை விளக்கு இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பட்டுப்போன மரம்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடி ஊராட்சியை சேர்ந்த பிரசித்தி பெற்ற கோட்டைத்தலமான பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லுகின்றனர். இந்தக்கோவிலின் வாசலில் பட்டுப்போன நிலையில் மரம் ஒன்று நீண்ட காலமாக ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த வழியாக தான் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆகவே ஏதேனும் விபரீத விபத்து ஏற்படுவதற்கு முன்பாக இந்த மரத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?

புதுக்கோட்டையிலிருந்து திருச்சி, சென்னை செல்லும் ரெயில் பயணிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ஆனால் தற்போது வரும் ரெயிலில் பெட்டிகள் பற்றாக்குறை உள்ளது. இதனால் ரெயில் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனது கூடுதல் பெட்டிகள் இணைத்து ரெயில்வே நிர்வாகம் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வர்ணம் பூசப்படாத வேகத்தடைகள்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமப்புற பகுதிகளுக்கு செல்லும் ஊரக சாலைகளில் சாலை முக்கம் மற்றும் பள்ளிகள் இருக்கும் பகுதிகளில் உள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் புதிதாக வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்