< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 Jan 2023 12:39 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புழுதி பறக்கும் சாலை

அரியலூர் முதல் செந்துறை வரை சாலை விரிவாக்கம் பணி கடந்த பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்கப் பணிகளினால் பல்வேறு விபத்துக்கள் நிகழும் அபாய நிலை உள்ளது. குறிப்பாக அரியலூர் குரும்பன் சாவடி முதல் தாமரைகுளம், ஓட்டக்கோவில் ஆகிய ஊர்களின் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக ஆங்காங்கே சின்ன ஜல்லி கற்கள் சாலையில் போடப்பட்டுள்ளது. ஆனால் தார் சாலையாக இதுவரை மாற்றம் செய்யவில்லை. இந்த சாலை வழியாகத்தான் அங்குள்ள 2 சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் லாரிகள் செல்லும்போது சாலை முழுவதும் புழுதி படலமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. மேலும் புழுதி பறப்பதால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எதிர் எதிரே வரும் வாகனங்களை கண்டறிய முடியாமல் தவிப்பதால் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் சூழல் உள்ளது. இரவு நேரங்களில் மிகவும் மோசமான நிலையே இருந்து வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண

நோய் தொற்று பரவும் அபாயம்

அரியலூர் மருத்துவமனை சாலை முருகன் வால்பட்டறை பின்புறம் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் நீண்ட காலமாக சாக்கடை வடிகால் வசதி ஏற்படுத்தி தருமாறு பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது காலி இடத்தில் கழிவுநீர் தேங்கி பன்றிகள் மேய்ந்து வருவதால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வீணாகும் குடிநீர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயிலிருந்து குழாய் உடைப்பு காரணமாக மடைதிறந்த வெள்ளம் போல் தண்ணீர் விரயமாகி கொண்டு இருக்கிறது. இதனால் அதிக அளவு குடிநீர் வீணாவதுடன், குழாய் உடைப்பு வழியாக வெளியேறிய தண்ணீர் மீண்டும் குழாய்க்குள் செல்வதால் சுகாதார சீர்கேடு உடைய தண்ணீர் குடிநீராக பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குடிநீரை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே தொடர்புடைய அதிகாரிகள் இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமாக சாலை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே விளந்தை தியாகராஜ நகரிலிருந்து ஜெயலலிதா நகர் செல்லும் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையோரம் உள்ள வடிகால்கள் தூர்ந்துபோன நிலையில் உள்ளதால் மழைபெய்யும்போது மழைநீர் தெருக்களை சூழ்ந்து கொள்வதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேவையற்ற வேகத்தடைகள்

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் இருந்து முத்துசேர்வாடம் வழியாக இளையபெருமாள் நல்லூர் வரை செல்லும் சாலையில் தேவையில்லாமல் 23 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த வேகத்தடைகளை முக்கியமாக இடத்தில் மட்டும் விட்டுவிட்டு தேவையற்ற இடத்தில் உள்ள வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்