< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
29 Jan 2023 7:08 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

மதுப்பிரியர்கள் பாதிப்பு

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதிகளிலுள்ள டாஸ்மாக் கடைகளில் விலை குறைவான மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் விற்பதற்கு விற்றபின், விலை அதிகமான மதுபாட்டில்களை கடைகளில் விற்பதால், ஏழை-எளிய மதுப்பிரியர்கள் மிகவும் பாதிப்புள்ளாகின்றனர். அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியில் மதுரை செல்லும் சாலையில் பாலத்தின் அருகில் ஒரு பகுதியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசி வரும் நிலையில் தற்போது மருத்துவ கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. மேலும் அதில் காலாவதியான மருந்து மற்றும் ஊசி, மாத்திரை உள்ளிட்டவைகளும் உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் பிரதான சாலையில் மருத்துவக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுகள் நிறைந்திருப்பதால் மக்கள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

திருச்சி ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரம் அருகே உள்ள கோபாலகிருஷ்ணன் கோவில் தெரு மற்றும் பகவதி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், சாலையோரம் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் குழாய்களின் அருகே செல்லும் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், குடத்தை வைத்து குடிநீர் பிடிக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிவுநீர் வாய்க்காலில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்து, தண்ணீர் பிடிக்கும் இடத்தில் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட பணி

திருச்சி மாவட்டம், அரியமங்கலம், காமராஜ் நகர், நெடுஞ்செழியன் தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி கடந்த 5 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளதால் இப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம் ஆலம்பட்டி முதல் நடுப்பட்டி வரையிலான சாலை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கும் வகையில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. ஆனால் தற்போது வரை தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்யும் போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரத்தில் பள்ளம்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி முதல் செங்கரையூர் வரை சாலையின் பக்கவாட்டில் மிகவும் பள்ளமாக உள்ளது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலையில் செல்லும்போது சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக வெங்கடாசலபுரம், ஆலங்குடி மற்றும் கல்விகுடி பகுதிகளில் மிக மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்