< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
25 Jan 2023 6:21 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெரு நாய்கள் தொல்லை

புதுக்கோட்டை நகரப் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பள்ளி மாணவர்கள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், காரக்கோட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்லும் வகையில் முறையாக போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளத்தில் கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் நடந்தே பள்ளிக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே மணமேல்குடியிலிருந்து காரக்கோட்டை வழியாக பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் நகர பஸ் அல்லது மினி பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மயான பாதை ஆக்கிரமிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், தென்னம்பாடி கிராமம் கூத்தக்குடியில் உள்ள மயானத்திற்கு செல்லும் மயானப்பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் இப்பகுதியில் உயிரிழப்பவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மயானப்பாதையை மீட்டுத்தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள நல்லூரிலிருந்து நல்லூர் விளக்கு சாலை வரை பல ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இச்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் மண் சாலைபோல் காட்சி அளிக்கிறது. இந்த சாலையின் வழியாக ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் சென்று வருகின்றனர். இவர்கள் குண்டும், குழியுமான சாலையில் அவ்வப்போதும் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பெண்கள் அவதி

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்காவில் பொதுமக்கள், குழந்தைகள் பொழுதுபோக்குக்காக பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனால் விடுமுறை நாட்களில் இங்கு ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இங்கு அமைக்கப்பட்டுள்ள கழிவறை சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பூங்காவிற்கு வரும் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்