< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
11 Jan 2023 11:08 PM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையோரம் செல்லும் கழிவுநீர்

திருச்சி காந்தி மார்க்கெட் கடைவீதி முன்பு கழிவுநீர் சாலையோரம் செல்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

அகற்றப்படாத குப்பைகள்

திருச்சி மாவட்டம், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ள தொடக்கப்பள்ளியில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு அவை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன், இதனால் இப்பகுதியில் கொசுத்தொலை அதிகரித்து வருகிறது. மேலும் விஷ ஜந்துக்களின் நடமாட்டத்தால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வர்ணம் பூசப்படாத வேகத்தடை

திருச்சி சிந்தாமணி காளியம்மன் கோவில் தெரு பெரியசாமி டவர், பட்டர் வொர்த் ரோடிற்கும், வடக்கு ஆண்டார் வீதிக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வேகத்தடையில் அடிக்கப்பட்டு இருந்த வெள்ளை வர்ணங்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் வேகமாக வந்து விபத்து சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், மதுராபுரி ஊராட்சியில் உள்ள திருச்சி செல்லும் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால் அமைக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆனதால் தற்போது தூர்ந்து போன நிலையில் காணப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே சாலையோரம் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த ரேஷன் கடை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள பெரியகொடுந்துறையில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கும் வகையில் இப்பகுதியில் ரேஷன் கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்