< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
5 Jan 2023 12:11 AM IST

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிதிலமடைந்த இருக்கைகள்

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் சாலையில் உள்ள ஹாஸ்டல் ஸ்டாப் பஸ் நிறுத்தத்தில் பயணிகளின் நலன் கருதி பயணிகள் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த இருக்கைகள் தற்போது சிதிலமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, சிதிலமடைந்து காணப்படும் இருக்கைகளை சரி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சாலையின் நடுவே மின்கம்பம்

திருச்சி மாநகராட்சி 37-வது வார்டு ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஈ.பி. காலனி மெயின் ரோடு எஸ்.பி.ஐ.ஒ.ஏ. பள்ளி செல்லும் பாதையில் சாலையின் நடுவே மின்கம்பம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பெரிதும் அடையூறாக உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் எதிர்பாராத விதமாக இந்த மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாதியில் நிற்கும் சாலை பணி

திருச்சி மாவட்டம், எம்.புத்தூர் முதல் காட்டுப்புத்தூர் வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருந்ததன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாலையில் இருந்த பழைய கற்கள் பேர்க்கப்பட்டு புதிதாக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை புதிய சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த சாலையின் வழியாக வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் புழுதி பறக்கின்றன. மேலும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணியை முழுமையடைய செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு

திருச்சி மாநகராட்சி கூனிபஜார் சவேரியார் கோவில் தெரு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்லும் வகையில் சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி காந்தி மார்க்கெட்டில் இருந்து செல்லும் பெரிய கடை வீதி சாலை மிகவும் குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உள்பட பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரிய கடை வீதியில் தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்