< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
1 Jan 2023 5:57 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பாதையை ஆக்கிரமித்த கருவேல மரங்கள்

அரியலூர் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையின் இருபுறமும் ஏராளமான சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் முளைத்து பாதையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் இப்பகுதியில் உயிரிழப்பவர்களின் உடலை கொண்டு செல்ல முடியாமல் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதுடன் சுடுகாட்டிற்கு செல்லும் வகையில் பாதை வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மயான கொட்டகை வேண்டும்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட மழவராயநல்லூர் (வடக்கு) கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் யாரேனும் உயிரிழந்து விட்டால், அவர்களின் உடலை தகனம் செய்வதற்கு மயான கொட்டகை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் மழை பெய்யும்போது உயிரிழப்பவர்களின் உடல்களை தகனம் செய்வதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை அமைக்கப்பட்டுள்ள தார் சாலை மிகவும் சிதலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையின் வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் நிலைதடுமாறி சென்று கீழே விழுவதுடன், விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பட்டுப்போன மரம்

அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்தின் அருகே பட்டுப்போன நிலையில் மரம் ஒன்று காணப்படுகிறது. சாலையோரத்தில் உள்ள இந்த மரம் பொதுமக்கள் நடமாட்டத்தின் போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பட்டுப்போன நிலையில் உள்ள மரத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிராம நிர்வாக அலுவலகம் அமைக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், புதுப்பாளையம் வருவாய் கிராமத்திற்கு கடந்த 7 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகம் இல்லாததால், ஊராட்சிக்கு சொந்தமான சேவை மையத்தில் கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்