< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Dec 2022 7:21 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிதிலமடைந்த சுகாதார வளாகம்

கரூர் மாவட்டம், நொய்யல் புகழூர் வாய்க்கால் அருகே அப்பகுதி பெண்களின் நலன் கருதி அங்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சுகாதார வளாகம் சிதிலமடைந்துவிட்டது. இதன் காரணமாக அந்த சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்தாத சூழ்நிலையில் இருந்து வந்ததின் காரணமாக அப்பகுதி பெண்கள் அதை பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். சுகாதார வளாகத்தை சுற்றி ஏராளமான சீமை கருவேல மரங்களும், பல்வேறு செடி, கொடிகளும் முளைத்து ஆக்கிரமித்துள்ளது. சுகாதார வளாகம் பழுதடைந்துள்ளதால் பெண்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற பயணிகள் நிழற்குடை

கரூர் மாவட்டம் ஈரோடு-கரூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஓலப்பாளையம் பிரிவு அருகே அப்பகுதி பயணிகளின் நலன் கருதி லட்சக்கணக்கான ரூபாய் செலவில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. பல ஆண்டுகளாக அந்த பயணிகள் நிழற்குடையை இந்த சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் இந்த பயணிகள் நிழற்குடையில் அமர்ந்து பஸ் ஏறி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்தனர். இந்நிலையில் நெடுஞ்சாலையின் விரிவாக்கம் காரணமாக பயணிகள் நிழற்குடை உள்ள அந்த வழியாக சென்ற தார் சாலை சுமார் 25 மீட்டர் தள்ளி நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக இந்த பயணிகள் நிழற்குடையில் பொதுமக்கள் அமர்ந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிழற்குடை அருகே செடி-கொடிகள் முளைத்துள்ளன. நிழற்குடையில் பயணிகள் இல்லாததால் இந்த வழியாக செல்லும் மது பிரியர்கள் மது பாட்டில்களையும், உணவு பொருட்களையும் கொண்டு வந்த இந்த நிழற்குடையில் அமர்ந்து மதுவை அருந்திவிட்டு, கொண்டு வந்த உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு அங்கேயே பாட்டிலை உடைத்து போட்டுவிட்டு செல்கின்றனர். அதேபோல் இரவு நேரங்களில் சமூக விரோத

பராமரிக்கப்படாத மயானம்

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் இருந்து கவுண்டன்புதூர் செல்லும் சாலையின் ஓரத்தில் சேமங்கி செல்வநகர் பகுதியை சேர்ந்தவர்களின் நலன் கருதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மயானம் உருவாக்கப்பட்டது. அதில் இறந்தவர்களின் உடலை எரியூட்ட கான்கிரீட் தளமும், புதைப்பதற்காக இடமும் ஒதுக்கப்பட்டது. இதன் காரணமாக செல்வநகர் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த இறந்தவர்களின் உடலை எரித்தும், புதைத்தும் வருகின்றனர். இந்நிலையில் மயானத்தில் இருக்கக்கூடிய காங்கிரீட் தளம் முழுவதும் பல்வேறு செடி, கொடிகள், விஷமுட்களால் சூழ்ந்துள்ளது. மேலும் புதைக்கும் இடமும் காடுபோல் காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக திடீரென இறந்தவர்களை புதைப்பதற்கும், எரிப்பதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இதனை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான புளியமரம்

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் இருந்து நொய்யல் செல்லும் சாலையின் ஓரத்தில் கடந்த சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நிழல் தரும் மரங்களான புளிய மரங்களை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நட்டு வளர்த்து வந்தனர். இந்த நிலையில் சாலை ஓரத்தில் நடப்பட்டுள்ள புளிய மரத்தில் பெரிய துவாரம் ஏற்பட்டு எந்த நேரத்திலும் தார் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் புளியமரம் தார் சாலையில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் சூழ்நிலையில் இருப்பதால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள புளிய மரத்தை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி மதுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து வடக்கே பாலப்பட்டி, தேவச்சிகவுண்டனூர், பொரணி பொம்மணத்துப்பட்டி ஆகிய ஊர்களுக்கு தார்சாலை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தார்சாலை மதுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து பாலப்பட்டி வரை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிப்போனது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த தார் சாலையை சீரமைத்து, தரமான தார் சாலையாக மாற்றி தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்