< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
21 Dec 2022 7:12 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நூற்றாண்டு வளைவு சீரமைக்கப்படுமா?

புதுக்கோட்டை நகர மாலையிடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு நினைவு விழா வளைவில் பொறிக்கப்பட்டுள்ள பெயர்கள் சிதிலமடைந்த காணப்படுகின்றன. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்து காணப்படுவதை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

போக்குவரத்திற்கு இடையூறு

புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பஸ்கள் நிறுத்தப்படாமல் நினைத்த இடங்களை நிறுத்தப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் பஸ் நிலையத்திற்கு வரும் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டு பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் பள்ளம்

புதுக்கோட்டை நகரின் மையப் பகுதியாக விளங்கக்கூடிய அண்ணா சிலை அருகில் உள்ள மார்த்தாண்டபுரம் 1-ம் வீதி சாலையில் பல மாதங்களாக சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு பள்ளமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் வகனத்தை பள்ளத்தில் விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குடிநீருக்காக சிரமப்படும் மக்கள்

புதுக்கோட்டை மாவட்டம், பழைய ஆதனக்கோட்டை கள்ளர் தெருவில் சுமார் 250 குடும்பங்களில் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கள்ளர் தெருவில் வசிக்கும் பொதுமக்களுக்கு கள்ளர் தெருவில் உள்ள பத்தாயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டாலும் தேவைக்கேற்ப குடிநீர் வினியோகம் போதுமானதாக இல்லாததால் பொதுமக்கள் நாள்தோறும் குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு அதிக கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைத்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான சுற்றுச்சுவர்

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, மலைகுடிப்பட்டி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாணவர்கள் நடமாட்டத்தின்போது இந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்