< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
14 Dec 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஊர்பெயர் பலகை சேதம்

திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் கீரனூர் அருகே ஊர் பெயர் பலகை மற்றும் அதன் கிலோ மீட்டர் தூரம் உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த பலகை சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சரி செய்து மீண்டும் புதிய பலகையை பொருத்த வேண்டும். இச்சாலையில் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என எதிர்பார்க்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். ரெயில்வே கேட் மூடிவிட்டு திறந்த பின் ஒரே நேரத்தில் வாகனங்கள் செல்லும் போது பெரும் நெருக்கடி ஏற்படுகிறது. இந்த சாலையில் உள்ள குண்டும், குழியை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பாதியில் நிற்கும் சாலை

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமம் பெரிய பள்ளிவாசல் செல்லும் கடைவீதி அருகில் உள்ள கொலுசம்மா வீதியில் பாதி ஹவ் பிளாக் சாலை போட்டும், மீதி சாலை போடாமலும் மண் சாலையாக உள்ளது. இதனால் மழைபெய்யும் போது இந்த சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையில் செல்லும் கழிவுநீர்

புதுக்கோட்டை தாஜ்மஹால் பள்ளிவாசல் அருகே சாலையில் கழிவுநீர் செல்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள், முதியவர்கள் இந்த கழிவுநீரில் பெரிதும் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பன்றிகள், நாய்கள், மாடுகளை பிடிக்க கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை நகரம் முழுவதும் அதிக அளவில் பன்றிகள் சுற்றித்திரிகிறது. இதை பிடிப்பதாக ஊராட்சியின் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தும் இதுவரை பன்றிகள் பிடிக்கப்படவில்லை. இதனால் பன்றிகளால் பரவும் நோய்கள் மழைக்காலமாக இருப்பதால் எளிதில் மனிதர்களை தாக்க கூடும். ஆகவே ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து கேப்பாரற்று திரிகின்ற பன்றிகள், நாய்கள், சாலையில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றி திரிகின்ற மாடுகள் ஆகியவற்றை உடனடியாக ஊராட்சி நிர்வாகம் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்