< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
27 Nov 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கண்ணூர் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் சாவடி முதல் சோடா கம்பெனி வரை உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் தேங்கி நிற்கும் கழிவுநீரில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெருநாய்கள் தொல்லை

திருச்சி மாவட்டம், உறையூர், குழுமணி சாலையில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க பாய்வதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை கடிக்க வருவதால் பெற்றோர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பட்டுப்போன புளியமரம்

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் ஊராட்சியில் உள்ள ஜே.எப். பள்ளி அருகில் திருச்சி- துறையூர் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஒரு புளியமரம் அதன் அடி பகுதி பட்டுப்போன நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த மரம் பலத்த காற்று அடித்தால் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், மாணவ-மாணவிகள் நடமாட்டத்தின்போது இந்த புளியமரம் கீழே விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மூடப்படாத வாய்க்கால்

திருச்சி மாநகராட்சி 51-வது வார்டு மூலைக்கொல்லை தெருவில் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாய்க்கால்கள் மூடப்படாமல் உள்ளதால் சாலையோரம் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வாய்க்கால் ஓரமாக இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு இருந்தவர் தவறி வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தார். ஆனால் இதுவரை வாய்க்காலை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கீழே விழும் வாகன ஓட்டிகள்

திருச்சி உறையூர் பாளையம் பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் சாலையில் சிலாப் கற்கள் கிடப்பதால் இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்