< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
27 Nov 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையோரம் உள்ள கிணறு

கரூர் மாவட்டம், கட்டிபாளையம் பகுதியில் இருந்து திருக்காடுதுறை வழியாக நத்தமேடுக்கு புகழூர் வாய்க்கால் வழியாக செல்வதற்காக தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார்சாலை வழியாக விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கட்டிபாளையம் பகுதியில் இருந்து திருக்காடுதுறை செல்லும் புகழூர் வாய்க்கால் தார்சாலை ஓரத்தில் விவசாய கிணறு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. அந்த விவசாய கிணற்றில் தண்ணீர் நிறைய உள்ளது. இந்த விவசாய கிணற்றில் தண்ணீர் இறைக்கி இறைக்க கிணறு அகலம் ஆகி கொண்டுள்ளது. இதன் காரணமாக தார் சாலை தொடர்ந்து கிணற்றுக்குள் விழுந்து தார் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. அதன் காரணமாக அந்த வழியாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி செல்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், கல்லடை ஊராட்சி, காணாபுதூர் அருகே உள்ள திருச்சி-தோகைமலை சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

கரூர் மாவட்டம், புங்கோடையில் இருந்து நத்தமேடு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதன் காரணமாகவும், தொடர் மழையின் காரணமாகவும் தார்சாலை நெடுகிலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நங்கவரம் பேரூராட்சி நச்சலூர் அரசு மருத்துவமனை முன் பட்டுப்போன நிலையில் மரம் ஒன்று இருந்தது. இந்த மரம் மக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பட்டுப்போன நிலையில் இருந்த அந்த மரத்தை அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.தேங்கி நிற்கும் கழிவுநீர்

மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கம்மநல்லூர் 7-வது வார்டில் உள்ள கழிவுநீர் வடிகால்களில் கழிவுநீர் செல்ல சரியான வழி இல்லாததால் கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதியில் மர்ம காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்