< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
27 Nov 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிதிலமடைந்த மின்கம்பம்

புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் மலையப்பா நகர் 4-ம் வீதியில் உள்ள மின் கம்பம் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இந்த பகுதி குடியிருப்பு பகுதியாக உள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பெரிய விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதை சரி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேறும், சகதியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா, கோத்திராப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலைக்குடிப்பட்டியில் இருந்து சீத்தமேடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் முறையாக சாலை வசதி இல்லாததால் மழை பெய்யும்போது சேறும், சகதியுமான சாலையில் இப்பகுதி மக்கள் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர். இதனால் பெண்கள், முதியவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் உள்ள மண் சாலையை தார்சாலையாக மாற்றித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் கழிவுகள்

புதுக்கோட்டை- அண்டக்குளம் சாலையின் இருபுறமும் சமூகவிரோதிகளால் இரவு நேரங்களில் கழிவுநீர், ஆடு, கோழி இறைச்சிகளின் கழிவுகள், பயன்படுத்தப்படாத வீட்டு உபயோக பொருட்கள், மருத்துவ கழிவுகள், உடைந்த கண்ணாடிகள், கட்டிட இடிபாடுகள், கற்கள் ஆகியவை கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலையில் குப்பையன்பட்டி விளக்கு சாலை அருகே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு தஞ்சை-புதுகை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது தேசிய நெடுஞ்சாலையின் உயம் 5 அடி உயர்த்தப்பட்டதால் பணிகள் நிழற்குடை 5 அடி பள்ளத்திற்கு சென்றதால் பயணிகள் பயன்படுத்தமுடிய நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய பயணியர் நிழற்குடையை இடித்துவிட்டு அந்த இடத்தில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள மேலாத்தூர் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக இருந்த ஊர் பெயர் பலகையை மறைத்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பெயர் பலகையில் ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை அகற்றினர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

ஆபத்தான நிழற்குடை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், மாங்கோட்டை ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. ஆபத்தான நிலையில் உள்ள இந்த பயணிகள் நிழற்குடையில் பயணிகள் அமர்ந்து பஸ் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மழை பெய்யும் போது கட்டிடத்தின் மேல் கூரை இடிந்து விழ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்