< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
13 Nov 2022 6:31 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சுகாதார சீர்கேடு

பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை ஓரத்தில் காய்கறி கழிவுகள், குப்பைகள், தள்ளு வண்டியில் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் கடைகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் உள்ளிட்டவைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கடிக்கவரும் தெருநாய்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் குழந்தைகளை கடிக்க வருவதினால் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை வெளியே அனுப்ப பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பஸ் வசதி இல்லாத சுற்றுலா தலம்

பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் கிராமத்தில் பலகோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் அமைந்துள்ளது. இங்கு பல பகுதிகளில் இருந்து தினமும் சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிடுகிறார்கள். ஆனால் அருகிலுள்ள அரியலூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து சரியான பஸ் வசதி இல்லாததால் கிராம மக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். குறைந்த சுற்றுலா தலங்களை மட்டுமே கொண்டுள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இத்தகைய இடங்களுக்கு அதிகாரிகள் முறையான பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தார் சாலை வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மருவத்தூர் கிராமம் பி.சி.மயான சாலை மெட்டல் சாலையை உள்ளது. இதனால் மழைபெய்யும்போது இறந்தவர்களின் உடல்களை எடுத்துச்செல்ல பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மெட்டல் சாலையை தார் சாலையாக தரம் உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த மின்கம்பம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் குன்னுமேடு சிற்றேரியில் ஏற்கனவே நடப்படப்பட்ட ஒரு மின்கம்பம் தற்போது சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்