< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
கரூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 Nov 2022 6:40 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

நிழற்குடை அமைக்கப்படுமா?

கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம்- வேலாயுதம்பாளையம் செல்லும் தார் சாலை அதியமான்கோட்டை, ஓலப்பாளையம், கரியாம்பட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்த வழியாக செல்லும் பஸ்சில் ஏறிச்செல்பவர்கள் மழை, வெயிலில் நின்று பஸ்களில் சென்று வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் புதிதாக நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி புன்னம் சத்திரம் பகுதிகளில் ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள், பலகாரக் கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள், துணிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் அதிகளவு பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் இந்த கடைகளில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் தார் சாலையின் ஓரத்தில் கொட்டி வருகின்றனர். அதேபோல் மருத்துவமனைகளில் சேகரிக்கப்படும் மருத்துவ கழிவுகளையும் தார் சாலை ஓரத்தில் கொட்டி வருகின்றனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. மேலும் மழைநீர் கொட்டி கிடைக்கும் கழிவுகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் அவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பயனற்ற சுகாதார வளாகம்

கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கி செல்வநகரில் அப்பகுதி பெண்களின் நலன் கருதி சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த சுகாதார வளாகத்தை அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சுகாதார வளாகத்தில் உள்ள குழாய்கள் பழுதடைந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதன் காரணமாக சுகாதார வளாகத்தை பெண்கள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பெண்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உள்ளாட்சித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுகாதார வளாகத்தை சீரமைத்து பெண்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

கரூர் -சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் செல்லும் தார் சாலை போடப்பட்டு சில ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தரமற்ற தார்சாலை போட்டதால் தார் சாலை நெடுகிலும் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த தார் சாலை வழியாக டி.என்.பி.எல். சிமெண்டு ஆலை, காகித ஆலைக்கு பல்வேறு மூலப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஏராளமான லாரிகள் செல்கின்றன. அதேபோல் 2 ஆலைகளிலிருந்தும் சிமெண்டு மூட்டைகள், காகித ரோல்களை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அதேபோல் புன்னம் சத்திரம் மற்றும் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான லாரிகளில் ஜல்லிக்கற்கள், செயற்கை மணல்கள், கற்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் கார்கள், இருசக்கர வாகனங்கள் என பல்வேறு வாகனங்களும் சென்று வருகின்றன. இந்நிலையில் ஆங்காங்கே தார் சாலை பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப

சட்டவிரோதமாக மது விற்பனை

கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் மெயின் ரோட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த டாஸ்மாக் மதுபான கடை இரவு பூட்டியவுடன் கடையிலிருந்து மதுபான பட்டில்களை ஒரு குறிப்பிட்ட நபரிடம் கொடுத்து விடிய விடிய மது பாட்டில்கள் விற்பனை செய்து வருகின்றனர். காலை முதல் பகல் 12 மணி வரை டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பு வரை மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் மது பாட்டில்களை வாங்கி தார் சாலை ஓரத்தில் அமர்ந்து அருந்திவிட்டு பாட்டில்களை உடைத்து செல்கின்றனர். மேலும் தாங்கள் பிளாஸ்டிக் கவரில் கொண்டு வரும் உணவு பொருளை சாப்பிட்டு விட்டு அங்கேயே போட்டு செல்கின்றனர். அதேபோல் மதுஅருந்தும் இளைஞர்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு ஆபாச வார்த்தைகளால் பேசிக் கொண்டும், அந்த வழியாக செல்லும் பெண்களை கேலி, கிண்டல் செய்தும் வருகின்றனர். இதனால் இப்பகுதியில் பெண்கள் நடமாட பெரிதும் அச்சப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்