< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
6 Nov 2022 6:39 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, தென்னம்பாடி கிராமம் கூத்தகுடியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் மயான பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆபத்தான மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, லெம்பலக்குடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து கான்கிரீட்டுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தார் சாலை அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டி கிராமம் முருகப்பட்டியார் வீதி, காதரப்பா வீதி, சோழை தெரு, சைதார் வீதி உள்ளிட்ட பகுதிகள் பல ஆண்டுகள் கடந்தும் தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் குண்டும், குழியுமான சாலையில் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துடன் சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தெரு விளக்கு வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை கிழக்கு ஒன்றியம் குளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதி மாத்தூர் ஊராட்சி பகுதி அரசு சிறப்பு உயர்நிலைப்பள்ளி பின்புறம் பாலாஜி நகர் உள்ளது. இப்பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் மின் விளக்கு அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் இப்பகுதியில் சுற்றித்திரிவதினால் பெண்கள் சுதந்திரமாக தெருவில் நடமாட முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே உள்ள பாண்டிபத்திரம் கிராமத்தில் மேலவீதியில் இருந்து கண்மாய்க்கரை செல்லும் சாலையின் ஓரத்தில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு அதில் இருந்து அருகில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியதன் காரணமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்