< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
2 Nov 2022 6:45 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அடிபம்பு அமைக்க வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஒன்றியம் மலைகுடிப்பட்டியில் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் வகையில், பொது மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இங்கு கரையில் ஈமச்சடங்கிற்கு தண்ணீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் அடிபம்பு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகளை துரத்தும் தெருநாய்கள்

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரப் பகுதிகளில் உள்ள திருவரங்குளம், மேட்டுப்பட்டி, கைக்குறிச்சி, திருக்கட்டளை, பேப்பரை உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை இந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வரத்து வாரிகள் தூர்வாரப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் பேருராட்சிக்கு உட்பட்ட செட்டி ஊரணியில் வரத்து வாரிகள் சரியாக தூர்வாரப்படாமல் பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. இதனால் மழைபெய்யும்போது மழைநீர் ஏரி, குளங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

உடைந்த நீர்த்தேக்க கட்டை

புதுக்கோட்டை மாவட்டம், ஆலவயல் ஊராட்சி துலுக்க ஊரணி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு அதனை சுற்றி கட்டை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டை கட்டி சில நாட்களே ஆனநிலையில் தற்போது உடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த நீர்த்தேக்க தொட்டியில் மக்கள் தண்ணீர் பிடிக்க தயக்கம் காட்சி வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத உயர் கோபுர மின்விளக்கு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், விஜயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகடை தெரு பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி எரியாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகளும், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதினால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்