< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
திருச்சி
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 Oct 2022 6:53 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சாலையோரம் கிடக்கும் பேரிகார்டு

திருச்சி கிராப்பட்டி ரெயில்வே மேம்பாலத்தின் இறக்கப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்ததை தொடர்ந்து, விபத்துகளை தடுக்க வான ஓட்டிகள் குறைந்த வேகத்தில் செல்லும் வகையில் சாலையில் பேரிக்காடு அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் அதில் விபத்து பகுதி மெதுவாக செல்லவும் என்ற விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகை ஒட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பேரிகார்டை சிலர் சாலையோரம் இழுத்து போட்டுவிட்டு அதன் அருகே தள்ளுவண்டி கடை அமைத்துள்ளனர். இதனால் இந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால் மீண்டும் விபத்துகள் அடிக்கடி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்தப்பட்டுள்ள பேரிகார்டை மீண்டும் சாலையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, பொய்கைப்பட்டி கிராமம் இராயன்பட்டி முதல் துலுக்கம் பட்டி வரை உள்ள சாலை குண்டும், குழியுமான உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்யும்போது சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதாலும், சேறும், சகதியுமாக சாலை காட்சி அளிப்பதாலும் பெண்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேறும், சகதியுமான சாலை

திருச்சி கம்பரசம்பேட்டையை அடுத்துள்ள வெள்ளாந்தெரு கணபதிநகர் சமுதாயகூடம் 2-வது தெருவில் தற்போது பெய்த மழையில் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

எரியாத மின் விளக்குகள்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், செங்கரையூர் தஞ்சை மாவட்டம் பூண்டி இடையே கொள்ளிடம் ஆற்றின் இடையே உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் போக்குவரத்து அதிகமாக உள்ள நிலையில், இரவு நேரங்களில் பாதிக்கு மேற்பட்ட மின் கம்பங்களில் மின்விளக்குகள் எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சட்ட விரோத மது விற்பனை

திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பிராம்பட்டி (தெற்கு) வளநாடு கைகாட்டி குடியிருப்பு பகுதிகளில் இரவு மற்றும் பகல் என 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் மது போதையில் இருப்பவர்களால் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வீணாகும் தண்ணீர்

திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம் பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த பொது கழிப்பிடம் இடிக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகிறது. இந்த நிலையில் இந்த கழிவறைக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் குழாய் முறையாக அகற்றப்படாததால் இதில் இருந்து தினமும் தண்ணீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்