< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 Oct 2022 6:48 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான தார் சாலை

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு செல்லும் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இரவு நேரத்தில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறு கீழே விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த சாலையை புதிய தார்சலையாக அமைத்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

நோய் பரவும் அபாயம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம்,திருவாலந்துறை அம்பேத்கர் தெருவில் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள சாலையில் மழைக்காலங்களில் நீர் தேங்கி பொதுமக்கள் நடக்க முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் சேறும், சகதியுமாக உள்ள அந்த இடத்தில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக சிமெண்டு சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குரங்குகள் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுச்சேரி கிராம பஸ் நிறுத்தத்தின் நிழற்குடையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குரங்குகள் அமர்துகொண்டு அங்கு இருக்கும் மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு பஸ்சுக்காக காத்திருக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து மளிகை பொருட்களை எடுத்துசென்றுவிடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கிடப்பில் போடப்பட்ட அங்கன்வாடி பணி

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாசெட்டிகுளம் கிராமம் முஸ்லிம் தெருவில் அங்கன்வாடி ஒன்று இயங்கி வந்தது. அதை இடித்து ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் இதுவரை பணியை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

குண்டும், குழியுமான தார்சாலை

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அரசலூர் கிராமத்தில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலை எசனை பிரிவு சாலை வரையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் தார் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு செல்வதுடன், அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்