< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
அரியலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
30 Oct 2022 6:47 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெரு விளக்கு அமைக்கப்படாத மின்கம்பம்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி ஜங்ஷன் பஸ் நிறுத்த பகுதியில் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக இப்பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மின்கம்பம் அமைக்கப்பட்டு சுமார் 6 மாதங்கள் கடந்தும் மின்கம்பத்தில் தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி இப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விபத்துக்கள் தடுக்கப்படுமா?

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எதிரே உள்ள திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடக்கும்போது அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதனை தடுக்க சாலையின் இருபுறமும் பேரிக்காடு அமைக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வடிகால் வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம், உடையார்பாளைம் வட்டம், பிலிச்சுக்குழி கிராமம் தெற்கு தெருவில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் மழைபெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி அப்பகுதியில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேம்படுத்தப்படாத சித்த மருத்துவப்பிரிவு

அரியலூர் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப்பிரிவு செயல்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தை பொறுத்தவரை பெரும்பாலான பகுதிகள் கிராமப்புறமாக உள்ளதால் இப்பகுதி மக்கள் சித்த மருத்துவத்தையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அரியலூர் அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவப் பிரிவு சிதிலமடைந்த கட்டிடத்தில் போதிய இடவசதி இன்று செயல்பட்டு வருகிறது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சித்த மருத்துவப்பிரிவை மேம்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

அரியலூர் மாவட்டம், செந்துரை வட்டம், இரும்புலிகுறிச்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட காலனி தெருவுக்கு செல்லும் வழியில் சாலையோரம் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்