< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 Oct 2022 5:56 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

உடைந்த அணைக்கட்டு சரிசெய்யப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், பாப்பாபட்டி ஊராட்சி, அருத்தோடிப்பட்டி கிராமத்தில் விவசாயிகள் சிலர் ஒன்றிணைந்து தங்களின் சொந்த செலவில் அணைக்கட்டு கட்டி விவசாயம் செய்து வந்தனர். தற்போது அந்த அணைக்கட்டு உடைந்துள்ளது. தற்போது பொருளாதாரம் இன்றி அணையை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் உடைந்த அணையை கட்டி சரிசெய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வேகத்தடைகள் அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஒன்றியம், பட்டத்திக்காடு ஊராட்சி, பட்டத்திக்காடு கிராமத்தில், கறம்பக்குடி -ஆவணம் கைகாட்டி செல்லும் சாலை உள்ளது. இச்சாலையில் உள்ள 2 மோசமான வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சிதிலமடைந்த மின்கம்பம்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பெரியகடை வீதியில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் சிதிலமடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. பொதுமக்கள் நடமாவட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சேறும், சகதியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, ஆலங்குடி அருகே எஸ்.களபம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள மண் சாலை, தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமான காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

தார்சாலை அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே உள்ள சூரப்பட்டியில் இருந்து அம்மாபட்டி செல்லும் சாலை மண் சாலையாக உள்ளது. இந்த சாலையின் வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண் சாலையை மாற்றி புதிய தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்