< Back
மாநில செய்திகள்
தினத்தந்தி புகார் பெட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி
|
26 Oct 2022 5:54 PM GMT

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குப்பைமேடாகும் புதிய பஸ் நிலையம்

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சென்னை, திருச்சி விரைவு பஸ்கள் நிற்கும் பகுதிக்கு தெற்கு பகுதியில் பெரியார், அம்பேத்கர் புத்தக மைய்யத்தையொட்டி உள்ள பகுதி குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. மேலும் இப்பகுதியை சமூக விரோதிகளும், பயணிகளும் பொதுக்கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் இருந்து புது அம்மாபாளையம் செல்லும் குறுக்கு தார் சாலையில் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் அடர்ந்த முட்களால் சூழப்பட்டு எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பாதை அடைபட்டுள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக சாலையில் உள்ள முட்களை வெட்டி சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சட்ட விரோத மது விற்பனை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பள்ளி மைதானத்தின் அருகில் உள்ள தோப்பில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்களும், மாணவ மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மது அருந்துபவர்களால் மாணவ-மாணவிகள் பெரிதும் அச்சத்துடன் நடமாடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வி.களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வி.களத்தூர் கல்லாற்றில் இப்பகுதி மக்கள் குப்பைகளையும், பல்வேறு கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மதுபான சந்துகடைகள் ஒழிக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் சந்துகடைகள் மூலம் மது விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. இதனால் பல குடும்பங்களில் இளம் விதவைகள் அதிகமாக இருக்கிறார்கள். பல இடங்களில் குற்றங்கள் அதிகமாக நடந்துள்ளன. பெண்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மதுபான சந்துகடை அறவே ஒழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்